புத்தனாம்பட்டியில் நடந்த வலுதூக்கும் போட்டியில் பட்டுக்கோட்டை மாணவி தங்கப்பதக்கம் வென்றார். புத்தனாம்பட்டியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு மற்றும் வலுதூக்கும் போட்டி மற்றும் ஆணழகன் போட்டி நடந்தது. இதில் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு பயிலும் மாணவி லோகப்பிரியா வலுதூக்கும் போட்டி 340 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் பெற்று பல்கலைக்கழக இடையிலான இரும்பு பெண்மணி பட்டத்தை பெற்றார்.
அதே கல்லூரியில் பயிலும் எம்ஏ பொருளியல் மாணவி அனிதா வலுதூக்கும் போட்டி 74 கிலோ உடல் எடைப்பிரிவில் 245 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் பெற்றார்.
அதே கல்லூரியில் பிஏ பயிலும் மாணவர் நாடிமுத்து 75 கிலோ உடல் எடைப்பிரிவில் ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இவர்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர், மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் துரைசெந்தில், பட்டுக்கோட்டை ஒன்றிய அதிமுக செயலாளர் சுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட வலுதூக்கும் சங்க செயலாளர் ஜலேந்திரன், மாவட்ட ஆணழகன் சங்க செயலாளரும், பயிற்சியாளருமான ரவிச்சந்திரன், கில்பர்ட், கராத்தே சேகர் ஆகியோர் பாராட்டினர்.
இரும்பு பெண்மணி லோகப்பிரியா
இரும்பு பெண்மணி லோகப்பிரியா இதற்குமுன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பல பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சந்திரபூரில் நடைபெற்ற அகில இந்திய அளவில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 57 கிலோ எடைப்பிரிவில் 325 கிலோ தூக்கி அகில இந்திய அளவில் முதல் பரிசை பெற்று தங்கப்பதக்கத்துடன் இரும்பு பெண்மணி பட்டத்தையும் பெற்றார்.
கேரள மாநிலம் ஆழப்புழையில் 13.08.2017 முதல் 19.08.2017 ஆகிய தினங்கள் நடைபெற்ற தென் இந்திய அளவிலான பளு தூக்கும் ( Power Lifting ) போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இவர் தங்கப்பதக்கத்துடன் இரும்பு பெண்மணி பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும் இவர் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதிப் பெற்றுள்ளார்.
அகில இந்திய அளவில் பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற லோகப்பிரியாவின் , 3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் வாழ்த்துக்கள் மூலம் ஊக்கம் அளிப்போம்…