சைவம்

Varutharacha Mushroom Kulambu Recipe In Tamil | Varutharacha Mushroom Kulambu : வறுத்தரைத்த காளான் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Varutharacha Mushroom Kulambu : வறுத்தரைத்த காளான் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு ஒரு அட்டகாசமான ரெசிபியை இன்று உங்கள் வீட்டில் செய்யுங்கள். அது தான் வறுத்தத்த காளான் குழம்பு. இந்த குழம்பு சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். காளான் அசைவ உணவுகளின் சுவையைக் கொடுப்பதால், மதிய வேளையில் இந்த குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுங்கள். நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

* காளான் – 1 கப் (நறுக்கியது)

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு…

* தேங்காய் – 1 கப்

* கறிவேப்பிலை – 1 கையளவு

* பட்டை – 1 இன்ச் துண்டு

* சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு காளானை சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், வறுத்தரைத்த காளான் குழம்பு தயார்.

இந்த பதிவின் மூலமாக Varutharacha Mushroom Kulambu : வறுத்தரைத்த காளான் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Varutharacha Mushroom Kulambu : வறுத்தரைத்த காளான் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment