அசைவம்

Thattukadai Egg Curry Recipe In Tamil | தட்டுக்கடை முட்டை குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தட்டுக்கடை முட்டை குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நீங்கள் முட்டை பிரியரா? முட்டையைக் கொண்டு பலவாறு செய்து சாப்பிட விரும்புபவரா? உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷ்ஷாக தட்டுக்கடை முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டைக் குழம்பு சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 4

* பிரியாணி இலை – 1

* கல்பாசி – 2 துண்டு

* வரமிளகாய் – 2

* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* சிக்கன் ஸ்டாக் க்யூப் – 1

* முட்டை – 4-5 (வேக வைத்தது)

* கொத்தமல்லி – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, கல்பாசி, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக 2 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வேக வையுங்கள்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, சிறிது நீரை ஊற்றி, சிக்கன் ஸ்டாக் க்யூப் சேர்த்து கிளறி, கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக வெட்டி சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தட்டுக்கடை முட்டை குழம்பு தயார்.

இந்த பதிவின் மூலமாக தட்டுக்கடை முட்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தட்டுக்கடை முட்டை குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment