நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மீல் மேக்கர் மஞ்சூரியன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இப்போது மீல் மேக்கர் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து, அதன் சுவை எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் – 1 கப்
* சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
* மைதா – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
மஞ்சூரியனுக்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் – 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 3 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் – 1/4 டீஸ்பூன்
* சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
* சோள மாவு – 1/2 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்
* உப்பு – தேவையான அளவு
* ஸ்பிரிங் ஆனியன் (வெள்ளைப் பகுதி) – 1 டேபிள் ஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் (பச்சை பகுதி) – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் மீல் மேக்கரைப் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் குறைந்தது 2-3 முறை கழுவிக் கொள்ளவும்.
* பின் மீல் மேக்கரில் உள்ள நீரை பிழிந்து விட்டு தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* பின்பு ஒரு பௌலில் சோள மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மீல் மேக்கர் அனைத்தையும் தயாரித்து வைத்துள்ள மைதா கலவையில் பிரட்டி போட்டு வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு மற்றும் ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப்பகுதியைப் போட்டு சில நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி, குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் அனைத்து சாஸ்கள் மற்றும் சோள மாவை நீரில் கலந்து சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* கலவை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த மீல் மேக்கர், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி, ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியைத் தூவினால், சுவையான மீல் மேக்கர் மஞ்சூரியன் தயார்!
இந்த பதிவின் மூலமாக மீல் மேக்கர் மஞ்சூரியன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மீல் மேக்கர் மஞ்சூரியன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .