சைவம்

Sesame Potato Toast Recipe In Tamil | எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட தோன்றினால், எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். இதற்கு வீட்டில் பிரட், உருளைக்கிழங்கு இருந்தால் போதும். இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் அற்புதமான ஸ்நாக்ஸ். குறிப்பாக வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தால், அவர்களுக்கு இம்மாதிரியான ஸ்நாக்ஸ் செய்தால், வந்தவர்களை அசத்தும் வகையில் இருக்கும்.

இப்போது எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எள்ளு விதைகள் – 1/4 கப்

* உருளைக்கிழங்கு – 4 (வேக வைத்து தோலுரித்தது)

* கொத்தமல்லி இலைகள் – சிறிது

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* பிரட் துண்டுகள்

* சாட் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெண்ணெய் – டோஸ்ட் செய்வதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொண்டு, தோலுரித்து மசித்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பெரிய பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், சாட் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் மசித்த உருளைக்கிழங்கு கலவையை வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு தட்டில் எள்ளு விதைகளைப் பரப்பி விட வேண்டும். பின் அதன் மேல் உருளைக்கிழங்கு வைத்த பிரட் பகுதியை எள்ளு விதைகளின் மீது வைத்து ஒருமுறை அழுத்தி விட வேண்டும்.

* பிறகு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயைத் தடவி, அதன் மேல் உருளைக்கிழங்கு தடவிய பிரட் பகுதியை சிறிது நேரம் வைத்து, எள்ளு விதைகள் பொன்னிறமானதும், பிரட்டை திருப்பிப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுக்க வேண்டும்.

* இதுப்போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் டோஸ்ட் செய்து எடுத்தால், எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி எள்ளு உருளைக்கிழங்கு டோஸ்ட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment