அசைவம்

Sambal Chicken Recipe In Tamil | சம்பல் சிக்கன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சம்பல் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

அசைவ உணவில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது என்றால் அது சிக்கன் தான். இந்த சிக்கனைக் கொண்டு பல வகையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் சம்பல் சிக்கன். அதென்ன சம்பல் சிக்கன் என்று நீங்கள் கேட்கலாம். இந்த சம்பல் சிக்கன் ஒரு பிரபலமான மலேசியன் ரெசிபி. இதன் ஸ்பெஷலே ஒரு சாஸில் சிக்கனை வேக வைப்பது தான். இதை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

சம்பல் செய்வதற்கு…

* சின்ன வெங்காயம் – 10

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* வரமிளகாய் – 10 முதல் 15

* இஞ்சி – 1 சிறிய துண்டு

* பூண்டு – 6 பல்

* லெமன் கிராஸ் – 1

* உப்பு – சுவைக்கேற்ப

* நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்

* புளி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* எண்ணெய் – 1/4 கப்

சிக்கன் சம்பல் செய்வதற்கு…

* சம்பல் – 1 கப்

* எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ

* தேங்காய் பால் – 1 கப்

* துருவிய தேங்காய் – 1/4 கப் (வறுத்தது)

* பட்டை – 1 துண்டு

* ஏலக்காய் – 4

* கிராம்பு – 4

* அன்னாசிப்பூ – 1

* லெமன் கிராஸ் – 2

* எலுமிச்சை இலைகள் – 2

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் புளி பேஸ்ட் மற்றும் நாட்டுச் சர்க்கரையைத் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.

* சம்பல் ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கி குளிர வைத்து ஜாரில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது சம்பல் சிக்கன் எப்படி செய்வதென்று காண்போம்.

* முதலில் ஒரு கப் சம்பலை ஒரு கடாயில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மசாலா பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

* பிறகு சிக்கனை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

* பின் மூடியைத் திறந்து, அதில் லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், தேங்காய் பால் சேர்த்து கிளறி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் வறுத்த தேங்காயை சேர்த்து கிளறி, மீண்டும் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால், சுவையான சம்பல் சிக்கன் தயார்.

இந்த பதிவின் மூலமாக சம்பல் சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சம்பல் சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment