சைவம்

Roasted Tomato Garlic Chutney Recipe In Tamil | தக்காளி பூண்டு சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தக்காளி பூண்டு சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு தோசை அல்லது இட்லி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் எளிமையான தக்காளி பூண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு தக்காளி, பூண்டு, புளி இருந்தால் போதுமானது.
கீழே தக்காளி பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பெரிய தக்காளி – 4

* பூண்டு – 10 பற்கள்

* வரமிளகாய் – 6

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* புளி – சிறிது (ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் தக்காளியைப் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் வரமிளகாயை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கை மசிக்கும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு பரிமாறினால், சுவையான தக்காளி பூண்டு சட்னி தயார்.

குறிப்பு:

* இந்த சட்னிக்கு தக்காளியை நேரடியாக நெருப்பில் ஓரளவு கருமையாக வாட்டி, பின் பயன்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.

* வேண்டுமானால், இதில் ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

* சட்னி மென்மையாக வேண்டுமென நினைப்பவர்கள், மிக்சர் ஜாரில் அரைத்துக் கொள்ளலாம்.

* முக்கியமாக இந்த சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.

இந்த பதிவின் மூலமாக தக்காளி பூண்டு சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தக்காளி பூண்டு சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment