சைவம்

Raw Onion Chutney Recipe In Tamil | Pacha Vengaya Chutney Recipe: வெங்காய சட்னி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Pacha Vengaya Chutney Recipe: வெங்காய சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தற்போது தக்காளியின் விலை அதிகம் இருப்பதால், பலரும் தக்காளியை அளவாக தங்கள் சமையலில் சேர்க்கிறார்கள். ஆனால் வீட்டில் தக்காளி இல்லாத சமயத்தில் இட்லி தோசைக்கு ஒரு சுவையான மற்றும் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைத்தால், வெங்காய சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு 4-5 பொருட்களே போதும். முக்கியமாக இந்த சட்னியை வதக்கி அரைக்க வேண்டிய அவசியமில்லை; அப்படியே அரைத்து தாளித்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

* வெங்காயம் – 2 (பெரியது மற்றும் நறுக்கியது)

* வரமிளகாய் – 2

* பூண்டு – 4 பல்

* புளி பேஸ்ட் – 2 டீஸ்பூன்/ புளி – ஒரு சிறிய துண்டு

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், வரமிளகாய், பூண்டு, புளி மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அரைத்த சட்னியை ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* தாளித்ததை சட்னியில் சேர்த்து கிளறினால், வெங்காய சட்னி தயார்.

இந்த பதிவின் மூலமாக Pacha Vengaya Chutney Recipe: வெங்காய சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Pacha Vengaya Chutney Recipe: வெங்காய சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment