நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ராகி மில்க் ஷேக் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமான, அதே சமயம் ஆரோக்கியமான பானம் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உடலுக்கு வலு சேர்க்கும் ராகியைக் கொண்டு ஒரு அற்புதமான மில்க் ஷேக் தயாரித்துக் கொடுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு மில்க் ஷேக் என்றால் பிடிக்கும். அதிலும் சத்தான ராகியைக் கொண்ட மில்க் ஷேக் செய்து கொடுத்தால், உடலுக்கு இன்னும் நல்லது.
தேவையான பொருட்கள்:
* ராகி மாவு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொக்கோ பவுடர் – 1/2 டேபிள் ஸ்பூன்
* பால் – 1 1/2 கப்
* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
* வென்னிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் – 3/4 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பின் மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் கொக்கோ பவுடரைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை வேக வைக்கவும். ராகி நன்கு வெந்த பின் அதை இறக்கி 15-30 நிமிடம் நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்ஸர் ஜாரில் குளிர்ந்த பால், சர்க்கரை மற்றும் குளிர வைத்துள்ள ராகி கலவை, வென்னிலா எசன்ஸ் சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான ராகி மில்க் ஷேக் தயார்.
குறிப்பு:
*
* கொழுப்பு நிறைந்த பாலைப் பயன்படுத்தினால் நல்ல சுவையுடன் இருக்கும்.
* சர்க்கரையை
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக ராகி மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ராகி மில்க் ஷேக் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .