சைவம்

Pineapple Rasam Recipe In Tamil | Pineapple Rasam : அன்னாசி ரசம்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Pineapple Rasam : அன்னாசி ரசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் உள்ளோர் ரசத்தை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் அடிக்கடி அவர்களுக்கு வித்தியாசமான ரசம் செய்து கொடுப்பீர்களா? இன்று ஏதாவது வித்தியாசமான ரசம் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அன்னாசிப்பழம் உள்ளதா? அப்படியானால் அன்னாசிப்பழ ரசம் செய்து கொடுங்கள். இந்த ரசம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* அன்னாசி – 2 துண்டுகள்

* பெரிய தக்காளி – 1

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* வேக வைத்த துவரம் பருப்பு – 1/3 கப்

* தண்ணீர் – 1 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

அரைப்பதற்கு…

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பச்சை மிளகாய் – 1

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 3/4 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் 1 துண்டு அன்னாசியைப் போட்டு அரைத்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் 1/2 தக்காளியை கையால் பிசைந்து, அதில் 3/4 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அத்துடன் அன்னாசி சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.

* அதன் பின் அரைத்த மிளகு கலவையை சேர்த்து 5-7 நிமிடம் பச்சை வாசனை போக மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* அதற்குள் மீதமுள்ள ஒரு துண்டு அன்னாசியை சிறு துண்டுகளாக வெட்டவும். அதேப் போல் மீதமுள்ள பாதி தக்காளியையும் வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் அன்னாசி துண்டுகள் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, கொதிக்கும் ரசத்தில் ஊற்றி, தேவையான அளவு நீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து துவரம் பருப்பை நன்கு மென்மையாக வேக வைத்து மசித்து, ரசத்துடன் சேர்த்து ஒரு கொதி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அன்னாசி ரசம் தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக Pineapple Rasam : அன்னாசி ரசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Pineapple Rasam : அன்னாசி ரசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment