சைவம்

Phool Makhana Gravy Recipe In Tamil | மக்கானா கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மக்கானா கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மக்கானா என்பது தாமரை விதைகள். இந்த விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதைகள் அனைத்து சூப்பர் மார்கெட் கடைகளிலும் கிடைக்கும். இந்த மக்கானாவைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை தயாரிக்கலாம். அதில் மக்கானா கிரேவி சப்பாத்தி, பூரி, புல்கா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் சாப்பாத்தி அல்லது புல்கா செய்வதாக இருந்தால், அதற்கு சைடு டிஷ்ஷாக மக்கானா கிரேவி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மக்கானா/தாமரை விதைகள் – 2 கப்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* பிரஷ் க்ரீம் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* நெய் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 3/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* முந்திரி – 5

* வரமிளகாய் – 2

* மிளகு – 1 /4 டீஸ்பூன்

* சோம்பு – 1 /2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் முந்திரி, வரமிளகாய், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பேனில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், மக்கானாவைப் போட்டு மொறுமொறுவென்று மாறும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்புசேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின்பு அதில் 3/4 கப் நீரை ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை குறைந்தது 7-10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் வறுத்த மக்கானாவை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, பின் பிரஷ் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மக்கானா கிரேவி தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக மக்கானா கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மக்கானா கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment