நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… பன்னீர் போண்டா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் பன்னீரைக் கொண்டு அட்டகாசமான ஒரு போண்டா செய்யலாம். இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடியதும் கூட.
இப்போது பன்னீர் போண்டா எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு – 1 கப்
* அரிசி மாவு – 1/4 கப்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – சிறிது
* புதினா – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா/சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
* பன்னீர் – 1 கப் (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட வேண்டும்.
* பிறகு கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.
இந்த பதிவின் மூலமாக சுவையான… பன்னீர் போண்டா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… பன்னீர் போண்டா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .