அசைவம்

Nattu Kozhi Soup Recipe | நாட்டுக்கோழி சூப்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான நாட்டுக்கோழி சூப் ரெசிப்பி(Nattu Kozhi Soup Recipe | நாட்டுக்கோழி சூப்) செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

Nattu Kozhi Soup Recipe

சூப் உடலுக்கு மிகவும் நல்லது. பொதுவாக சூப்பானது ஒரு நாளின் எந்நேரம் வேண்டுமானாலும் குடிக்க ஏற்றது. சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அனைத்து சூப்புகளுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பவை. ஆனால் அசைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் சூப் என்றால் அது நாட்டுக்கோழி சூப் தான். அதிலும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது என்றே கூற வேண்டும். இதற்கு இதில் சேர்க்கப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த மசாலா பொருட்கள் தான்.

சொல்லப்போனால் சளி பிடித்திருக்கும் போது, ஒரு கப் நாட்டுக்கோழி சூப் குடித்தால், சளியில் இருந்து ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* நாட்டுக்கோழி – 1/4 கிலோ

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 1/4 கப்

* தக்காளி – 1 (சிறியது, நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 2 கப்

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பட்டை – 1/2 இன்ச்

* ஏலக்காய் – 1

* கிராம்பு – 1

* கறிவேப்பிலை – சிறிது

அரைப்பதற்கு…

* மல்லி விதைகள் – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 3

* தண்ணீர் – சிறிது

Nattu Kozhi Soup Recipe | நாட்டுக்கோழி சூப் செய்முறை:

* முதலில் மிக்ஸி ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.

* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

* பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

* அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.

* குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!

இந்த பதிவின் மூலமாக நாட்டுக்கோழி சூப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி நாட்டுக்கோழி சூப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment