நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Mango Milkshake Recipe : ஈஸியான… மாம்பழ மில்க் ஷேக் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும் மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதோடு இந்த சீசனில் மாம்பழம் ஏராளமானோர் அதிகம் வாங்கி சாப்பிடும் பழமாகவும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை எப்போதும் அப்படியே சாப்பிடுவீர்களா? அப்படியானால் சற்று வித்தியாசமாக அதைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடியுங்கள். இந்த மாம்பழ மில்க் ஷேக் கொளுத்தும் வெயிலில் குடிப்பதற்கு சற்று இதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* மாம்பழ துண்டுகள் – 1 கப்
* பால் – 1 1/2 கப் (கொதிக்க வைத்து குளிர வைத்தது)
* சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
* ஐஸ் கட்டிகள் – சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மாம்பழத் துண்டுகளையும், சர்க்கரையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 1/2 கப் பாலை ஊற்ற வேண்டும்.
* பின்பு ஐஸ் கட்டிகளை சேர்த்து மூடி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
*
* இப்போது சுவையான மாம்பழ மில்க் ஷேக் தயார்.
குறிப்பு:
* விருப்பமுள்ளவர்கள் இந்த மாம்பழ மில்க் ஷேக்கின் மேல் பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ்களை பொடியாக வெட்டி மேலே தூவிக் கொள்ளலாம்.
* இல்லாவிட்டால், அதன் மேல் ஐஸ் க்ரீம் அல்லது பொடியாக நறுக்கிய மாம்பழத் துண்டுகளையும் மேலே தூவிக் கொள்ளலாம். இதனால் மாம்பழ மில்க் ஷேக்கின் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக Mango Milkshake Recipe : ஈஸியான… மாம்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Mango Milkshake Recipe : ஈஸியான… மாம்பழ மில்க் ஷேக் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .