சைவம்

Krishna Janmashtami Special: Rava Payasam Recipe In Tamil | கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று கிருஷ்ண ஜெயந்தி. பலரது வீடுகளிலும் மாலை வேளையில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து பூஜைகளை செய்து கிருஷ்ணரை வணங்குவார்கள். கிருஷ்ணருக்கு பாலால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு ஒரு வித்தியாசமான பாயாசம் செய்து படைக்க நினைத்தால், ரவா பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்வது மிகவும் எளிது. மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* ரவை – 1/2 கப்/100 கிராம்

* பால் – 1 லிட்டர்

* சர்க்கரை – 200 கிராம்

* கண்டென்ஸ்ட் மில்க் – 3 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய் – 5

* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

* உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

* நெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மீதமுள்ள நெய்யை வாணலியில் ஊற்றி, அதில் ரவையை சேர்த்து 3 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் பாலை ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி கொதிக்க விட்டு, 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* ரவையானது நன்கு வெந்ததும், அதில் ஏலக்காயை தட்டிப் போட்டு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரவா பாயாசம் தயார்.

இந்த பதிவின் மூலமாக கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: ரவா பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment