அசைவம்

Kadai Chicken Gravy Recipe In Tamil | கடாய் சிக்கன் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கடாய் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஞாயிற்றுக் கிழமை வந்துவிட்டது. பலரும் என்ன சமைத்து நாவிற்கு விருந்தளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சற்று வித்தியாசமாக அசைவ உணவை செய்து சுவைக்க நினைத்தால், அதற்கு வட இந்திய ஸ்பெஷல் ரெசிபியான கடாய் சிக்கன் கிரேவி சிறந்த தேர்வாக இருக்கும். கடாய் சிக்கன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

இப்போது கடாய் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 1/4 கிலோ

* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

* நறுக்கிய குடைமிளகாய் – 3 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* தக்காளி – 2 (அரைத்தது)

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* கிராம்பு – 2

* ஏலக்காய் – 1

வறுத்து அரைப்பதற்கு…

* மல்லி விதைகள் – 2 டீஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய – 3

* பட்டை – 1 இன்ச்

செய்முறை:

* முதலில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குடைமிளகாயை சேர்த்து ஒருமுறை வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு சிக்கனை மஞ்சள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியில் பாதியைப் போட்டு, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி ஊற வைத்துக் கொள்ளவும்.

* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் மீதமுள்ள வறுத்து அரைத்த பொடியை சேர்த்து நன்கு கிளறி, பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.

* பிறகு ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, 1 கப் நீர் ஊற்றி மூடி வைத்து 10-15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் அல்லது குக்கரில் போட்டு 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.

* இறுதியில் குக்கரைத் திறந்து, கிரேவி அதிகம் வேண்டுமானால் தேவையான அளவு நீர் சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயையும் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கடாய் சிக்கன் கிரேவி தயார்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக கடாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கடாய் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment