சைவம்

Italian Hot Chocolate | இத்தாலியன் ஹாட் சாக்லேட்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சரி, இப்போது அந்த இத்தாலியன் ஹாட் சாக்லேட் பானத்தை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

பால் – 1 1/2 கப்
சோள மாவு – 1/2 டீஸ்பூன்
சாக்கோ சிப்ஸ் – 3 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொக்கோ பவுடர் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பாலில் சோள மாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு வாணலியில் ஊற்றி சூடேற்றி, அத்துடன் சாக்கோ சிப்ஸ் மற்றும் தேன் சேர்த்து, குறைவான தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

சாக்கோ சிப்ஸ் முற்றிலும் கரைந்ததும், அதில் சாக்கோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெடி!!!

குறிப்பு:

* வேண்டுமானால் இந்த ஹாட் சாக்லேட்டுடன் 1/4 டீஸ்பூன் வென்னிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

* இதில் சேர்க்கப்பட்டுள்ள சோள மாவு, இந்த பானத்தை கெட்டித்தன்மைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
* இந்த ஹாட் சாக்லேட் பானத்தை முழுமையாக குறைவான தீயில் செய்யுங்கள்.

இந்த பதிவின் மூலமாக இத்தாலியன் ஹாட் சாக்லேட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி இத்தாலியன் ஹாட் சாக்லேட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment