சைவம்

Fried Potato Pies Recipe | ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் மொறுமொறுப்பாக எதையேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியைத் தேடுகிறீர்களா? அதிலும் உருளைக்கிழங்கு கொண்டு ருசியான ஸ்நாக்ஸ் ரெசிபி வேண்டுமா? அப்படியானால் ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை ரெசிபியை முயற்சி செய்யுங்கள். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும்.

ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எளிமையான ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பார்த்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ:
ருசியான… கடம்பூர் போளி

தேவையான பொருட்கள்:

* மைதா – 2 கப்

* உப்பு – தேவையான அளவு

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு…

* உருளைக்கிழங்கு – 3 (பெரியது மற்றும் வேக வைத்தது)

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி – ஒரு கையளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* பூண்டு – 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து, நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து, 1 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்கவும்.

* பின் மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பௌலில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் அரைத்த வெங்காய விழுது, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறிது எடுத்து தட்டையாக தட்டி, அதன் ஒரு ஓரத்தில் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மடித்து முனைகளை மூடவும். இதேப்போல் அனைத்து மாவைக் கொண்டும் தயாரித்துக் கொள்ளுங்கள்.

* இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாரித்து வைத்துள்ளதை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை ரெடி!

Image Courtesy

இந்த பதிவின் மூலமாக ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஃப்ரைடு உருளைக்கிழங்கு பை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment