நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான டல்கோனா காபி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பெரும்பாலானோர் காலையில் எழுந்ததும் உடல் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் பானம் தான் காபி. இந்த காபியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களிடையே காபியில் ஒரு வகையான டல்கோனா காபி மிகவும் பிரபலமானது. இதனால் டல்கோனா காபியின் மீதான ஆசை அதிகரித்து, பலருக்கும் இந்த காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டுள்ளது.
கீழே டல்கோனா காபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காபி பவுடர் – 1 டீஸ்பூன்
* சர்க்கரை – 2 டீஸ்பூன்
* சுடுநீர் – 1 டீஸ்பூன்
* பால் – 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் காபி பவுடரைப் போட்டு கொள்ள வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையைப் போட்டு, சுடுநீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் கொண்டு ஒருமுறை கிளறி விட வேண்டும். இப்போது கலவையின் நிறம் அடர் ப்ரௌன் நிறத்தில் இருக்கும்.
* பின்பு ஒரே வேகத்தில் 10-15 நிமிடம் தொடர்ச்சியாக அடிக்க வேண்டும். அப்படி தொடர்ந்து அடிக்கும் போது கலவையின் நிறமானது மாறி ஒருவித க்ரீம் போன்று காணப்படும். இப்போது டல்கோனா கலவை தயார்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
* பின் ஒரு டம்ளரில் ஒரு டேபிள் பூஸ்ன் டல்கோனா கலவையைப் போட்டு, அதில் ஒரு கப் சூடான பாலை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதில் ஒரு ஸ்பூன் டல்கோனா கலவையைப் போட்டால், டல்கோனா காபி ரெடி!
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக டல்கோனா காபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி டல்கோனா காபி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .