அசைவம்

Crispy Cashew Chicken Recipe In Tamil | மொறுமொறுப்பான முந்திரி சிக்கன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் மொறுமொறுப்பாக, அதே வேளையில் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கனை விரும்பி சாப்பிடுபவராயின், அவர்களுக்கு சிக்கனைக் கொண்டு ஒரு சிம்பிளான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் செய்து கொடுத்தால், அவர்கள் இதை விரும்பி சாப்பிடுவதோடு, நீங்கள் நல்ல பாராட்டையும் பெறலாம்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* சோள மாவு – 1/2 கப்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சாஸ் செய்வதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* முந்திரி – 1/4 கப்

* வரமிளகாய் – 3

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

* வினிகர் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 3-4 கப்

* சர்க்கரை – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் வரமிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் சோயா சாஸ், வினிகரி, உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு முந்திரி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை கிளறி, இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி இறக்கினால், மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் தயார்.

இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment