நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான க்ரீமி சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா? இந்த வாரம் வித்தியாசமான சுவையுடைய சிக்கன் ரெசிபி செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் நீங்கள் ஹோட்டல்களில் மட்டுமே அதிகம் சுவைக்கக்கூடிய ரெசிபியைச் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் க்ரீமி சிக்கன் கிரேவியை முயற்சி செய்யுங்கள். இந்த ரெசிபியை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. மேலும் இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 500 கிராம்
* தயிர் – 2 கப்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தயக் கீரை – 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் – 1/2 கப்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து பிசைந்து, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, சிறிது நீர் சேர்த்து 3-4 நிமிடம் வேக வைக்கவும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி, பின் எஞ்சியிருக்கும் சிக்கன் ஊற வைத்த கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் மூடி கொண்டு மூடி வைத்து குறைவான தீயில் குறைந்தது 25 நிமிடம் வேக வைக்க வேண்டும். வேண்டுமானால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
* சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் பிரஷ் க்ரீம், மிளகுத் தூள் மற்றும் காய்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான க்ரீமி சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக க்ரீமி சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி க்ரீமி சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .