சைவம்

Chocolate Sandwich Recipe In Tamil | சாக்லேட் சாண்ட்விச்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சாக்லேட் சாண்ட்விச் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தற்போது சாண்ட்விச் பலரது காலை உணவாக உள்ளது. சிலருக்கு இது பசியைப் போக்கும் நல்ல ஸ்நாக்ஸாகவும் உள்ளது. சாண்ட்விச்சில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சாண்ட்விச் தான் சாக்லேட் சாண்ட்விச். இது சுவையாக இருப்பதோடு, வயிற்றையும் நிரப்பும். நீங்கள் சாக்லேட் சாண்ட்விச்சை கடைகளில் தான் சாப்பிட்டுள்ளீர்கள் என்றால், இனிமேல் அதை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரட் – 4 துண்டுகள்

* டார்க் சாக்லேட் துண்டுகள் – 4 டேபிள் ஸ்பூன்

* வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் வெண்ணெயை தடவ வேண்டும்.

* பின் பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தில் சாக்லேட் துண்டுகளை வைத்து, மற்றொரு பிரட்டின் வெண்ணெய் தடவிய பக்கத்தை மேலே வைத்து மூட வேண்டும்.

* இதேப் போன்று மற்ற இரண்டு பிரட் துண்டுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெயை தடவி தயாரித்து வைத்துள்ள சாண்ட்விச்சை வைத்து, லேசாக அழுத்திவிட்டு, பிரட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, திருப்பிப் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* இதேப் போல் மற்றொரு சாண்ட்விச்சையும் டோஸ்ட் செய்து கொண்டால், சாக்லேட் சாண்ட்விச் தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக சாக்லேட் சாண்ட்விச் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சாக்லேட் சாண்ட்விச் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment