சைவம்

Capsicum Masala Curry Recipe | குடைமிளகாய் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குடைமிளகாய் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

குடைமிளகாய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை அதிகம் சேர்க்க மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய வைட்டமின் சி குடைமிளகாயில் ஏராளமாக இருப்பதால், அடிக்கடி குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் பலருக்கு குடைமிளகாயை வாங்கினால், எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரிவதில்லை. அவர்களுக்காக ஓர் அற்புதமான குடைமிளகாய் ரெசிபியைத் தான் கீழே கொடுத்துள்ளோம். அது தான் குடைமிளகாய் கிரேவி.

இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியதாகவும் இருக்கும். இப்போது குடைமிளகாய் கிரேவியின் செய்முறையைக் காண்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 1/2 கப்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* உலர்ந்த வெந்தய கீரை – 1/4 டீஸ்பூன்

* உப்பு – தேவையான அளவு

* தண்ணீர் – 1/2 கப்

* சர்க்கரை – 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முந்திரியை சுடுநீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைத்து, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து, பின் அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி விட வேண்டும்.

* பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, குறைவான தீயில் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பச்சை வாசனை போக குறைந்தது 10 நிமிடம் ஆகும்.

* பச்சை வாசனை போன பின், அதில் அரைத்த முந்திரி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி கிளறி நன்கு ஒருமுறை கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியில் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து, மேலே காய்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கி தூவி கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் கிரேவி ரெடி!

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக குடைமிளகாய் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குடைமிளகாய் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment