சைவம்

Aadi Kozhukattai Recipe In Tamil | ஆடி கொழுக்கட்டை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஆடி கொழுக்கட்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்நாளில் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று பூஜைகளை செய்து அம்மனை வணங்குவார்கள். சிலர் ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏதாவது இனிப்புகளை செய்து அம்மனுக்கு படைப்பதுண்டு. நீங்கள் இந்த வார ஆடி வெள்ளிக்கிழமையான இன்று ஏதாவது ஸ்பெஷலாக செய்ய விரும்பினால், ஆடி கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த ஆடி கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

* வெல்லம்/சர்க்கரை – 3/4 கப்

* தேங்காய் – 1 கப் (துருவியது)

* அரிசி மாவு – 1 1/2 கப்

* ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

* சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

* அப்படி பிசையும் போது, அது நீர் விட்டு வரும் போது, அதில் சுக்கு பொடி, ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அதன் பின் அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

* பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக/கொழுக்கட்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* கொழுக்கட்டையின் மேல் தேங்காய் தெரிய ஆரம்பித்தால், நீரில் இருந்து கொழுக்கட்டைகளை எடுத்து விடுங்கள். இப்போது சுவையான ஆடி கொழுக்கட்டை தயார்.

இந்த பதிவின் மூலமாக ஆடி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஆடி கொழுக்கட்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment