Asus ZenFone: உலகின் மிகப்பெரிய மொபைல் சந்தைகளில் இந்தியச் சந்தையும் ஒன்று. ஃப்ளாக்ஷிப் கில்லர் (Flagship Killer) எனச் சொல்லப்படும், சிறப்பான ஸ்பெக்ஸ் உடன் மலிவான விலைக்குக் கிடைக்கும் மொபைல்கள்தான் தற்போது இந்தியச் சந்தையில் ஹிட் அடிக்கின்றன. அதே நேரத்தில் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் விலை அதிகமான மொபைல் போன்களுக்கும் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில், மலிவுவிலை மொபைல் போன்களுக்குப் பெயர்போன அசூஸ் நிறுவனம், ஜென்ஃபோன் AR (Zenfone AR) என்ற விலை அதிகமான மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.49,999/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கேற்ப இந்த மாடலில் அப்படி என்னதான் வசதிகள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போமா..
‘உலகின் முதல் 8 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன்’ என்ற டேக்கில் இது விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனின் RAM அதிகமென்பதால், இதன் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு வசதிகள் இருப்பதால், பயன்படுத்தும்போது ஸ்ட்ரக் ஆகும் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக இதன் ரேம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நெளகட் உள்ள இந்த மொபைல் போனில், 128 GB இன்டர்னல் மெமரி இருக்கிறது. இந்தியச் சந்தையில் இவ்வளவு இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் போன்கள் மிகக்குறைவு. இதுமட்டுமில்லாமல், 2 டெரா பைட் (Terabyte) வரை இதன் மெமரியை நீட்டித்துக்கொள்ளவும் முடியும். 8 மெகா பிக்ஸல் திறன் உள்ள முன்பக்க கேமராவானது, 2.0 Aperture திறன் கொண்டது. இதனால், அதிகத்தரத்தில் துல்லியமான செல்பிகளை எடுக்க முடியும்.
இந்த மொபைல் போனின் பின்புறம் மொத்தம் மூன்று கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மெயின் கேமரா 23 மெகா பிக்ஸல் திறன் கொண்டது. இதுபோக, ஒரு கேமரா மோஷன் சென்சாராகவும், மீதமிருக்கும் ஒரு கேமரா டெப்த் சென்சாராகவும் பயன்படும் வகையில் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. எதற்காக மூன்று கேமராக்கள் என்றால், ஒவ்வொரு கேமராவும் ஆக்மென்ட்டட் ரியாலிட்டி சேவையைப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பொருளை கேமரா வழியாகவே அளவிடக்கூடிய டெக்னாலஜி இந்த மொபைலில் இருக்கிறது. உதாரணமாக, கேமரா வழியாக ஒரு டேபிளின் நீளம், அகலம் மற்றும் உயரம் போன்ற அத்தனை விவரங்களையும் அளவிட முடியும்.
ஆக்மென்ட்டட் ரியாலிட்டி சேவையை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனத்தின் டேங்கோ இதில் இருக்கிறது. டேங்கோவைப் பயன்படுத்தும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இந்த ஜென்ஃபோன் AR (Zenfone AR) தான். இதற்கு முன்னதாக லெனோவோ Phab 2 Pro மொபைலில் தான் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதைப்போலவே வெர்ச்சுவல் ரியாலிட்டி இயங்குதளமான கூகுளின் Daydream View தொழில்நுட்பத்தையும் இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. 5.7 இன்ச் Super AMOLED QHD (1440×2560 பிக்ஸல்) டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 5 வசதி, ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர் போன்றவை இதில் இருக்கின்றன.
Quick Charge 3.0 வசதி இருப்பதால் மொபைல் போன் பேட்டரியைத் துரிதமாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். வேப்பர் கூலிங் தொழில்நுட்பம் இந்த மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், மற்ற ஆண்ட்ராய்டு மொபைல்களைப் போல் விரைவில் சூடாகாது. ஆனால், இவ்வளவு வசதிகள் இருந்தும் வெறும் 3300 mAh திறன் கொண்ட பேட்டரி மட்டுமே இருப்பது இதன் சின்ன மைனஸ்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…