சைவம்

White Sauce Pasta Recipe In Tamil | ஒயிட் சாஸ் பாஸ்தா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பாஸ்தா மிகவும் பிரபலமான ஒரு இத்தாலியன் ரெசிபி. பாஸ்தாவில் ஒயின் சாஸ் பாஸ்தா மிகவும் ருசியான ரெசிபி. இதை பெரும்பாலும் ரெஸ்டாரண்ட்டுகளில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஒயிட் சாஸ் பாஸ்தாவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஒயிட் சாஸ் பாஸ்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 1 கப் (100 கிராம்)

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)

* காளான் – 5-6 (நறுக்கியது)

* பச்சை பட்டாணி – 1/4 கப்

* கார்ன் – 1/4 கப்

* குடைமிளகாய் – 1/2

வெள்ளை சாஸ் செய்வதற்கு…

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* பால் – 2 கப்

* உலர்ந்த துளசி/பேசில் இலைகள் – 1/4 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்

* உப்பு மற்றும் மிளகு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சேர்த்து நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பாஸ்தாவை சேர்த்து, 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். பாஸ்தா நன்கு வெந்ததும் நீரை வடிகட்டி விட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் காளானை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் பச்சை பட்டாணி, கார்ன், குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி 2-3 நிமிடம் வதக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு, அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும்.

* பிறகு அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதாவை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கிளறி, பின் அதில் பாலை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

* பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், வேக வைத்துள்ள பாஸ்தா, துளசி இலைகள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதன் மேல் சிறிது பார்மீசியன் சீஸ் தூவி பரிமாறினால், சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

Image Courtesy: steffisrecipes

இந்த பதிவின் மூலமாக ஒயிட் சாஸ் பாஸ்தா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஒயிட் சாஸ் பாஸ்தா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment