சைவம்

Venthaiya Keerai Chapathi Recipe In Tamil | Vendhaya Keerai Chapathi Recipe : வெந்தயக்கீரை சப்பாத்தி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Vendhaya Keerai Chapathi Recipe : வெந்தயக்கீரை சப்பாத்தி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் சற்று வித்தியாசமான சப்பாத்தி சாப்பிட விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வெந்தயக்கீரை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை சப்பாத்தி செய்யுங்கள். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தியை தயிர் மற்றும் ஊறுகாயுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 2 கப்

* வெந்தயக் கீரை – 1 கட்டு

* சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய்/நெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் வெந்தயக் கீரையின் இலைகளை தனியாக எடுத்து, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, வெந்தயக் கீரை, சாம்பார் பவுடர், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று அனைத்து உருண்டைகளையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் சிறிது எண்ணெய் தடவி தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்.

குறிப்பு:

இந்த பதிவின் மூலமாக Vendhaya Keerai Chapathi Recipe : வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Vendhaya Keerai Chapathi Recipe : வெந்தயக்கீரை சப்பாத்தி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment