நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
வெனிலா புட்டிங் மற்றும் ராஸ் பெர்ரி சாஸ் ரெசிபி ரெம்ப ஈஸியான டிசர்ட் ஆகும். குறைந்த நேரத்தில் அழகாக செய்து விட முடியும்.
அதே நேரத்தில் மிகுந்த சுவையுடன் செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதும். கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் உங்க செல்லக் குட்டி குழந்தைகளின் பார்ட்டி போன்றவை வந்தால் இந்த டிசர்ட் செய்து அசத்திடலாம். இதை பிரிட்ஜில் வைத்து கூட அப்போது பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு நாள் இருந்தால் கூட கெட்டு போகாது.
எனவே அடுத்த நாள் பார்ட்டிக்கு அப்படியே சில்லான யம்மியான இந்த டிசர்ட்டை எல்லோருக்கும் கொடுத்து அவர்களின் பாராட்டை பெறலாம்.
Recipe By: பூஜா குப்தா
Recipe Type: டிசர்ட்
Serves: 2-3
பால் (உங்களின் தேவைக்கேற்ப) – 1கப்
ஸ்கார்ன் ஸ்டார்ச் / உருளைக்கிழங்கு ஸ்டார்ச் – 1டேபிள் ஸ்பூன்
மாப்பிள் சிரப் – 1 குவியல் டேபிள் ஸ்பூன்
பிங்க் உப்பு – கொஞ்சம்
சிறிய ஒரு முட்டை/ அரை பெரிய அல்லது மீடிய வடிவ முட்டை – 1
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வெனிலா பொடி / வெனிலா எஸ்ஸென்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ராஸ்பெர்ரி சாஸ் தயாரிக்க :
தேவையான பொருட்கள்
ப்ரஷ்/ குளிர்விக்கப்பட்ட ராஸ்பெர்ரி-2 கப்
மாப்பிள் சிரப் – 1-2 டேபிள் ஸ்பூன்
ஒரு கடாயில் கார்ன் ஸ்டார்ச் மற்றும் உப்பு சேர்க்கவும்
ஒரு தனி பெளலில் முட்டையை கட்டியில்லாமல் அடித்து கொள்ளவும்
அதனுடன் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதை கடாயில் ஊற்றவும். அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்.
இப்பொழுது கடாயை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். நுரைகள் வந்து கலவை கெட்டியாகும் வரை சமைக்கவும்.
பிறகு அடுப்பிலிருந்து எடுத்து வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ்யை சேர்க்கவும்.
கொஞ்சம் நேரம் ஆற வைக்க வேண்டும். கட்டி ஏற்படுவதை தடுக்க நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு அதை ஒரு தனியான புட்டிங் கப்களில் அல்லது டிப்பிங் பெளல்களில் ஊற்ற வேண்டும்
ஒவ்வொரு கப்புகளையும் க்ளிங் சீட்டால் மூடி பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும்
பிறகு ஒரு சிறிய கடாயை எடுத்து அதில் ராஸ்பெர்ரியை மிதமான சூட்டில் மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்
பிறகு வேக வைத்த ராஸ்பெர்ரியை ஸ்பூனை கொண்டு நன்றாக மசித்து கொண்டு அதனுடன் மாப்பிள் சிரப் சேர்க்கவும்
இந்த சாஸை சூடாக அல்லது குளிர்வித்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புட்டிங் மீது ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
யம்மி டேஸ்டியான வெனிலா புட்டிங் மற்றும் ராஸ்பெர்ரி சாஸ் ரெசிபி ரெடி.
இந்த பதிவின் மூலமாக டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி டேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா? செய்ய ரொம்ப ஈஸி!! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…