நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான உளுந்து இனிப்பு பணியாரம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் பணியாரம் செய்து கொடுங்கள். பணியாரத்தில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று உளுந்து இனிப்பு பணியாரம். இந்த பணியாரம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பொதுவாக உளுத்தம் பருப்பில் புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. இது தவிர, இதில் இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல முக்கிய சத்துக்களும் உள்ளன. எனவே உணவில் உளுத்தம் பருப்பை சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக பெண்கள் உளுத்தம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
சரி,
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் மாவு – 1/2 கப்
* அரிசி மாவு – 1 கப்
* பொடித்த வெல்லம் – 1 கப்
* ஏலக்காய் பொடி – 1 டீபூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
* நெய் – சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் உளுத்தம் மாவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின்பு பொடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் கெட்டி வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டி, பின் அந்த வெல்ல நீரை சேர்த்துக் கொள்ளலாம்.)
* பிறகு அதில் ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை குழிகளில் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான உளுந்து இனிப்பு பணியாரம் தயார்.
இந்த பதிவின் மூலமாக உளுந்து இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி உளுந்து இனிப்பு பணியாரம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…