நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மணமணக்கும்… தக்காளி குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மதியம் சாதத்திற்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? தக்காளி மட்டும் தான் உள்ளதா? அப்படியானால் சிம்பிளாக தேங்காயை அரைத்துவிட்டு தக்காளி குழம்பு செய்யுங்கள். இந்த தக்காளி குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். அதோடு தக்காளி குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* பட்டை – 1
* கிராம்பு – 2
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* பூண்டு – 3 பல்
* சின்ன வெங்காயம் – 15
* தக்காளி – 3
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1-2 டீஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
* கொத்தமல்லி – சிறிது
அரைப்பதற்கு…
* தேங்காய் – 1/4 கப்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, சீரகத்தை சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தக்காளி குழம்பு தயார்.
Image Courtesy: steffisrecipes
இந்த பதிவின் மூலமாக மணமணக்கும்… தக்காளி குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மணமணக்கும்… தக்காளி குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…