Categories: சைவம்

Tomato Bhaji Recipe In Tamil | Tomato Bhaji Recipe: தக்காளி பாஜி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Tomato Bhaji Recipe: தக்காளி பாஜி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறார்களா? அதற்கு சற்று புளிப்பான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் வீட்டில் வெங்காயம், தக்காளி மற்றும் சில மசாலா பொடிகள் இருந்தால், எளிய முறையில் ஒரு சைடு டிஷ் செய்யலாம். இதன் பெயர் தக்காளி பாஜி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கு ஏற்ற சைடு டிஷ் ரெசிபி.

இந்த தக்காளி பாஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பாஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்

* கரம் மசாலா – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

அரைப்பதற்கு…

* பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.

* அதன் பின் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், தக்காளி பாஜி தயார்.

இந்த பதிவின் மூலமாக Tomato Bhaji Recipe: தக்காளி பாஜி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Tomato Bhaji Recipe: தக்காளி பாஜி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago