நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தாய் பேசில் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
விடுமுறை நாட்களில் வீட்டில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புபவரா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கனைக் கொண்டு எப்படி ஒரு அற்புதமான தாய் பேசில் சிக்கன் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாய் பேசில் சிக்கன் ஒரு அற்புதமான ஸ்டாட்டர். மேலும் மாலை வேளையிலும் இது ஒரு ஸ்நாக்ஸ் போன்று செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 300 கிராம்
* முட்டை – 1
* சோள மாவு – 1/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* துளசி இலைகள் – 5
* சிவப்பு மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் – 1 (சற்று நீளமாக நறுக்கியது)
* எண்ணெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
சாஸ் தயாரிப்பதற்கு…
* சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் – 1 டீஸ்பூன்
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சோள மாவு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* சிக்கனைப் பிரட்டிய முட்டை கலவை மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நீராகவும் இருக்கக்கூடாது, ஓரளவு பதத்தில் சிக்கனுக்கு நல்ல கோட்டிங் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சாஸ் தயாரிக்கும் முறை..
* மிக்சர் ஜாரில், சிவப்பு மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சாஸ் தயாரிப்பதற்கு கொடுத்துள்ள சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சாஸ்பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, பின் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சாஸ் கலவையை ஊற்றி நன்க கிளறி விட வேண்டும். சாஸ் கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இறுதியாக துளசி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தாய் பேசில் சிக்கன் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக தாய் பேசில் சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தாய் பேசில் சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…