Tamil Nadu CM:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக MLA, சி.வி.சேகர் மகன் திருமணம் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. பட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ள எம்.எல்.ஏ., மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் (Tamil Nadu CM) வியாழக்கிழமை (26-ம் தேதி) கலந்துகொள்கிறார்.
முதல்வர் கலந்துகொள்வதற்காக மிகப் பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் செலவில் அம்மா அரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் OPS, EPS ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
முதல்வர் வருகையையொட்டி புதிதாக தார்சாலைகள் போடப்படுகிறது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் குப்பைகள் அகற்றுதல், மரங்களை வெட்டுதல் எனப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. MLA வக்கீல் சி.வி.சேகருக்கு வயது 55. இவர் 20-05-1962 அன்று பிறந்தார். இவருடைய தந்தை வெள்ளைச்சாமி, தாயார் குஞ்சம்மாள், மனைவி கலைச்செல்வி, மகன் திலீப். இவர் பி.டெக்., படித்துள்ளார். மகள் கண்மணி.
சி.வி.சேகர் இளங்கலை பட்டப்படிப்பை திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக்கல்லூரியிலும் முடித்துள்ளார். இவர் மாவட்ட இளைஞரணி செயலாளர் பதவி வகித்துள்ளார்.
மாவட்ட வக்கீல் பிரிவு இணை செயலாளராக உள்ளார். 1986-ம் ஆண்டு முதல் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், மதுக்கூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்து வருகிறார். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வரும் இவர், நோட்டரி பப்ளிக் மற்றும் உறுதிமொழி ஆணையராகவும் இருந்து வருகிறார்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…