நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Mangai Pachadi Recipe : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – இனிப்பு மாங்காய் பச்சடி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கு மாங்காய் விற்கப்படுவதைக் காணலாம். பொதுவாக மாங்காய்க்கு என்று தனிப்பிரியர்கள் உண்டு. மாம்பழத்தை விட மாங்காயை பலர் விரும்பி சாப்பிடுவதுண்டு. இப்படிப்பட்ட கோடைக்காலத்தின் தொடக்கத்தில் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆகவே இந்த தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி அனைத்து வீடுகளிலும் பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த மாங்காய் பச்சடியை அப்படியே சாப்பிடலாம் அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மாங்காய் – 1
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் – 1/2 கப்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 3-4
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* வேப்பம்பூ – சிறிது
செய்முறை:
* முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, மாங்காய் துண்டுகள் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி வெல்லம் கரையும் வரை கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
* இப்போது மாங்காய் நன்கு மென்மையாக வெந்து இருக்கும். இந்நிலையில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி நன்கு வெந்துள்ள மாங்காயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.
* வேண்டுமானால் இத்துடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, மாங்காயுடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து 10 நொடிகள் வதக்கி விடுங்கள்.
* இறுதியாக தாளித்ததை மாங்காய் பச்சடியில் சேர்த்து கிளறினால், மாங்காய் பச்சடி தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக Mangai Pachadi Recipe : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – இனிப்பு மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Mangai Pachadi Recipe : தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் – இனிப்பு மாங்காய் பச்சடி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .