நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாம்பழம், மாங்காய் சீசன் என்றாலே அது கோடைக்காலம் தான். அந்த கோடைக்காலம் தொடங்கிவிட்டது. அதோடு தமிழ் புத்தாண்டும் வரப்போகிறது. இந்த தமிழ் புத்தாண்டு அன்று மாங்காய் பச்சடி செய்வது வழக்கம்.
முக்கியமாக மாங்காய் பச்சடியை செய்து சுவைத்த பின்னர், எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மாங்காய் – 1
* பாகு வெல்லம் – 1/3 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 (வெட்டியது)
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மாங்காயை கழுவி தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெல்லத்தைப் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பாகு தயாரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் உள்ள மாங்காயுடன் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகு சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் ஜாம் பதத்திற்கு வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தேங்காய் விழுதை குக்கரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள மாங்காயுடன் சேர்த்து கிளறி இறக்கினால், மாங்காய் பச்சடி தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் மாங்காய் பச்சடி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…