நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான புளி சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
நீங்கள் சட்னி பிரியரா? இட்லி, தோசைக்கு சட்னி சாப்பிட பிடிக்குமா? இதுவரை நீங்கள் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புளி சட்னியை செய்து சுவைத்ததுண்டா? நிச்சயம் இருக்காது. சொல்லப்போனால் புளி சட்னி பற்றி இப்போது தான் கேட்டிருப்பீர்கள். இந்த புளி சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சட்னியை பயணம் மேற்கொள்ளும் போது எடுத்து செல்ல ஏற்றது. இது 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் – 1/2 கப் (துருவியது)
* உளுத்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 1
* கடுகு – 1 டீஸ்பூன்
* புளி – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக் வேண்டும்.
* பின்னர் அதில் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* தேங்காய் பொன்னிறமானதும், அதில் வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான புளி சட்னி தயார்.
குறிப்பு:
* பருப்பை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதிகமாக புளி சேர்க்க வேண்டாம்.
* தேங்காயை அளவுக்கு அதிகமாக வறுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் சுவை மாறிவிடும்.
* தாளிக்கும் போது நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இன்னும் நல்ல ப்ளேவர் கிடைக்கும்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக புளி சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி புளி சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…