நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பொதுவாக குழந்தைகள் ஸ்வீட் கார்ன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த ஸ்வீட் கார்னை நீங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வேக வைத்து தான் சாப்பிடக் கொடுப்பீர்கள். ஆனால் ஸ்வீட் கார்னைக் கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறான ஒரு அட்டகாசமான ரெசிபியை செய்யலாம் என்பது தெரியுமா? அது தான் ஸ்வீட் கார்ன் பக்கோடா. குறிப்பாக இது மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது செய்து சுவைக்க ஏற்றது.
கீழே ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஸ்வீட் கார்ன் – 2 கப் (வேக வைத்தது)
* வெங்காயம் – 1/2 (மெல்லியதாக நறுக்கியது)
* கடலை மாவு – 1/2 கப்
* அரிசி மாவு – 2 டேபிள் பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீபூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீபூன்
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீபூன்
* சாட் மசாலா – 1/4 டீபூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
* உப்பு – 1/4 டீபூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வேக வைத்த கார்ன் மற்றும் வெங்காயத்தைப் போட்டு நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ளலாம்.
* பின் அதில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பெங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பிசையும் போது, தண்ணீர் சேர்க்கக்கூடாது.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான ஸ்வீட் கார்ன் பக்கோடா தயார்.
Image Courtesy: Indianhealthyrecipes
இந்த பதிவின் மூலமாக ஸ்வீட் கார்ன் பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஸ்வீட் கார்ன் பக்கோடா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…