நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Soya Chunks Masala Recipe: மீல்மேக்கர் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? வீட்டில் உள்ளோர் இதை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் மீல்மேக்கல் மசாலா செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* மீல்மேக்கர் – 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* வேக வைத்த பட்டாணி – 1 கப்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* பட்டை – 1/4 இன்ச்
* கிராம்பு – 2
வறுத்து அரைப்பதற்கு…
* தக்காளி – 1
* தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2-3 முறை அலசி, அதிகப்படியான நீரை பிரிந்துவிட்டு வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், சோம்பு, தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைத்து, நீர் அதிகம் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
* இப்போது அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் மீல்மேக்கரை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி, வேக வைத்த பட்டாணியை சேர்த்து பிரட்டி இறக்கினால், மீல்மேக்கர் மசாலா தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக Soya Chunks Masala Recipe: மீல்மேக்கர் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Soya Chunks Masala Recipe: மீல்மேக்கர் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…