நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மீல் மேக்கர் 65 ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுப்பாக சாப்பிட கேட்கிறார்களா? நீங்கள் அவர்களுக்கு வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் மீல் மேக்கர் 65 செய்து கொடுங்கள். மீல் மேக்கர் 65 ஒரு எளிமையான ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் – 1/2 கப்
* இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* மைதா – 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் – 1 சிட்டிகை
* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் வேக வைத்து, பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, எஞ்சியுள்ள நீரை பிழிந்துவிட வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கேசரி பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மீல் மேக்கர், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு பிரட்டி, 30 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சோள மாவு மற்றும் மைதா சேர்த்து நன்கு பிரட்டி கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல் மேக்கர் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான மற்றும் மொறுமொறுப்பான மீல் மேக்கர் 65 தயார்.
Image Courtesy: naliniscooking
இந்த பதிவின் மூலமாக மீல் மேக்கர் 65 எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மீல் மேக்கர் 65 ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .