நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சின்ன வெங்காய தொக்கு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
முக்கியமாக இந்த தொக்கு 3 நாட்கள் வரை வைத்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இருந்தால், 10 நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். இப்போது சின்ன வெங்காய தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் – 1 கப்
* பூண்டு – 2 பல்
* புளி – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 6
* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக குறைவான தீயில் குறைந்தது 10 நிமிடம், கெட்டியாகி நிறம் மாறும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* எப்போது அரைத்த வெங்காய பேஸ்ட்டின் நிறம் மாறுகிறதோ, அப்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத் தொக்கில் சேர்த்து கிளறினால், சுவையான சின்ன வெங்காயத் தொக்கு தயார்.
குறிப்பு: இந்த வெங்காயத் தொக்கு 3 நாட்கள் வரை அறைவெப்பநிலையிலும், 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜிலும் நன்றாக இருக்கும்.
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக சின்ன வெங்காய தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சின்ன வெங்காய தொக்கு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .