நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மணமணக்கும்… சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கருவாட்டு பிரியர்களே! நீங்கள் இதுவரை பலமுறை கருவாட்டு குழம்பை செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை செய்து சுவைத்ததுண்டா? இந்த கருவாட்டு குழம்பானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. ஆகவே இதன் சுவை சற்று தனித்தே தெரியும்.
அப்படியென்றால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி – 1 சிறு எலுமிச்சை அளவு
* சின்ன வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)
* பூண்டு – 5 பல் (நீளமாக கீறியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் – 1 /2 கப்
* தண்ணீர் – 1 கப்
* நெத்திலி கருவாடு – 2 பாக்கெட்
செய்முறை:
* முதலில் கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் புளியை நீரில் ஒரு 10 நிமிடம் ஊற வைத்து, நன்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த புளி நீரில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி ஒரு கப் நீர் ஊற்றி, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதை அடுப்பில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இப்போது அதில் நல்லெண்ணெயை ஊற்றி, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பானது ஓரளவு கெட்டியானதும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து கிளறி, ஒரு 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு தயார்.
குறிப்பு:
* கருவாட்டு குழம்பை தயாரித்த, ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டால் தான் அதன் சுவை நன்றாக இருக்கும்.
இந்த பதிவின் மூலமாக மணமணக்கும்… சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மணமணக்கும்… சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .