Categories: அசைவம்

Sindhi Style Chicken Curry Recipe In Tamil | சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு சிக்கன் சமைக்க சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.
கீழே சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சிக்கன் – 500 கிராம்

* கருப்பு ஏலக்காய் – 1

* பிரியாணி இலை – 1

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 3

* கிராம்பு – 2

* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

* தயிர் – 1/2 கப்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வதக்க வேண்டும்.

* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின் அதில் தயிர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீர் ஊற்றி நன்கு கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago