நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சிம்பிளான… தக்காளி கொச்சி ரெசிபி! ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தற்போது கொரோனா பெருந்தொற்றால் வெளி கடைகளில் வாங்கி சாப்பிட யோசிக்க வேண்டியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே நம்மை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக தற்போதைய சூழ்நிலையில் கடைகளில் அதிகம் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
இன்று பலரும் வீட்டிலேயே இருந்து அலுவலக வேலை, சமையல் வேலை, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது என்று 24 மணிநேரமும் மிகவும் பிஸியாகவே இருக்கிறோம். வீட்டில் இருந்து அலுவலக வேலையை செய்வதே கடினமான ஒன்று. அதில் பொறுமையாக சமையல் சாப்பிடவா நமக்கு நேரம் இருக்கும். அதிலும் இரவு நேரத்தில் பலரது வீடுகளில் சப்பாத்தி தான் இரவு உணவாக இருக்கும். உங்கள் வீட்டிலும் இன்று இரவு சப்பாத்தி செய்வதாக திட்டமிட்டிருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிப்பவராக இருந்தால், இக்கட்டுரை உங்களுக்கானது.
ஏனெனில் கீழே சப்பாத்திக்கு அற்புதமாக இருக்கும் ஒரு சிம்பிளான சைடு டிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. அது வேறொன்றும் இல்லை, தக்காளி கொச்சி ரெசிபி தான். இந்த தக்காளி கொச்சி செய்வதற்கு 10 நிமிடம் தான் ஆகும். சரி, வாருங்கள் தக்காளி கொச்சியை எப்படி செய்வதென்று காண்போம். குறிப்பாக இது பேச்சுலர்களுக்காக ரெசிபியும் கூட.
MOST READ: சிம்பிளான… தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* பட்டை – 1 துண்டு
* கிராம்பு – 2
* பிரியாணி இலை – 1
* சோம்பு – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தாளிப்பதற்கு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு வதக்க வேண்டும். அப்படி வதக்கும் போது, சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சீக்கிரம் தக்காளியும், வெங்காயமும் வதங்கும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, ஒரு டம்ளர் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான தக்காளி கொச்சி ரெடி!
இந்த பதிவின் மூலமாக சிம்பிளான… தக்காளி கொச்சி ரெசிபி! எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சிம்பிளான… தக்காளி கொச்சி ரெசிபி! ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .