நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Rice Pakora : சிம்பிளான.. அரிசி பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஸ்நாக்ஸ் சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் வெள்ளை சாதம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடைய அரிசி பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இந்த அரிசி பக்கோடாவை செய்வது சுலபம் மற்றும் இது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது. அதோடு இந்த அரிசி பக்கோடா காபி, டீ குடிக்கும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை சாதம் – 2 கப்
* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது
* புதினா – சிறிது (நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சாதத்தை மத்து கொண்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் எண்ணெயைத் தவிர, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீர் தெளித்து கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலவையை சிறு உருண்டை உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக Rice Pakora : சிம்பிளான.. அரிசி பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Rice Pakora : சிம்பிளான.. அரிசி பக்கோடா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…