Categories: சைவம்

Sambar Without Dal Recipe In Tamil | பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு சாம்பாரை விரும்பி சாப்பிடுவார்களா? ஆனால் உங்கள் வீட்டில் சாம்பார் செய்வதற்கு பருப்பு இல்லையா? அப்படியானால் பருப்பு இல்லாத சாம்பாரை செய்யுங்கள். இந்த சாம்பாரை இன்ஸ்டன்ட் சாம்பார் என்றும் கூறலாம். இந்த சாம்பாரை 10 நிமிடத்தில் தயாரிக்கலாம். குறிப்பாக இந்த சாம்பார் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து தோலுரித்தது மற்றும் துண்டுகளாக்கப்பட்டது)

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி கிளற வேண்டும்.

* பிறகு உருளைக்கிழங்கு துண்டுகளை சேர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இன்ஸ்டன்ட் சாம்பார் தயார்.

இந்த பதிவின் மூலமாக பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago