அசைவம்

Restaurant Style Dragon Chicken Recipe In Tamil | ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ரெஸ்டாரண்ட்டுகளுக்கு சென்றால் பெரும்பாலும் நாம் வீட்டில் சமைத்து சாப்பிடாத உணவுகளைத் தான் வாங்கி சாப்பிடுவோம். அப்படி ரெஸ்டாரண்ட் செல்லும் போது அநேக மக்கள் வாங்கி சாப்பிடும் ஓர் சிக்கன் ரெசிபி என்றால் அது டிராகன் சிக்கனாகத் தான் இருக்கும். ஏனெனில் இதை நாம் அதிகம் வீட்டில் செய்து சாப்பிடமாட்டோம். ஆனால் இந்த டிராகன் சிக்கனை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். அதுவும் பண்டிகை காலங்களில் அசைவ உணவு சமைக்கும் போது, இதையும் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம் (நீள நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

ஊற வைப்பதற்கு…

* சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

* மிளகாய் பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

* முட்டை – 1

* மைதா – 1/2 கப்

* சோள மாவு – 1/4 கப்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகு – 1 டீஸ்பூன்

* அஜினமோட்டோ – 1/4 டீஸ்பூன்

சாஸ் தயாரிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வரமிளகாய் – 3

* முந்திரி – 20

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பெரிய குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* சோயா சாஸ் – 2 டீஸ்பூன்

* தக்காளி கெட்சப் – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* அஜினமோட்டோ – 1/4 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

* சர்க்கரை – 2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் சிக்கன் நன்கு கழுவி, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் பூண்டு விழுது, சோயா சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, அஜினமோட்டோ, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு நீர் வற்றி சற்று கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் தயார்.

இந்த பதிவின் மூலமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment