அசைவம்

Ramadan Special: White Mutton Kurma Recipe In Tamil | ரமலான் ஸ்பெஷல்: மட்டன் வெள்ளை குருமா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரமலான் ஸ்பெஷல்: மட்டன் வெள்ளை குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

விடுமுறை நாட்களில் அசைவ உணவை வீட்டில் சமைத்து அவசரமின்றி பொறுமையாக ருசித்து சாப்பிடுவதே தனி சுகம் என்று கூறலாம். அதுவும்
அதுவும் தற்போது ரமலான் நோன்பு நோற்பவர்கள், இந்த ரெசிபியை செய்து மாலையில் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு…

* மட்டன் – 1/2 கிலோ

* தயிர் – 1/4 கப்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

குருமாவிற்கு…

* நெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* ஏலக்காய் – 4

* கிராம்பு – 3

* பட்டை – 1 சிறிய துண்டு

* தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நீளமாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 5-6

* கறிவேப்பிலை – ஒரு கையளவு

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கு…

* துருவிய தேங்காய் – 1/2 கப்

* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்

* முந்திரி – 10

செய்முறை:

* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அந்த மட்டனுடன் ‘ஊற வைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும், மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

* பின் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து 5-10 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி 6-8 விசில் விட்டு மட்டனை நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ளவும்.

* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மட்டன் வெள்ளை குருமா தயார்.

இந்த பதிவின் மூலமாக ரமலான் ஸ்பெஷல்: மட்டன் வெள்ளை குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரமலான் ஸ்பெஷல்: மட்டன் வெள்ளை குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment