அசைவம்

Rajasthani Laal Maas Recipe In Tamil | ராஜஸ்தானி மட்டன் லால் மாஸ்

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ராஜஸ்தானி மட்டன் லால் மாஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

ராஜஸ்தானி லால் மாஸ் ராஜஸ்தானில் மிகவும் பிரபலமான அசைவ உணவாகும். இந்த ரெசிபி காஷ்மீரி மிளகாய் மற்றும் பிற மசாலாப் பொருட்களைக் கொண்டு நல்ல சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படும் கிரேவியாகும். இந்த ரெசிபிக்கு சாதாரண வரமிளகாயை கூட பயன்படுத்தலாம். ஆனால் காஷ்மீரி வரமிளகாய் சேர்த்தால், ரெசிபியானது நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். அதோடு இந்த ரெசிபி தக்காளி எதுவும் சேர்க்காமல் புளிப்பு சுவைக்கு தயிர் சேர்ப்பதால், வித்தியாசமான சுவையைக் கொடுக்கிறது.

நீங்கள் இந்த வாரம் ஒரு வித்தியாசமான வடஇந்திய உணவை செய்ய நினைத்தால், ராஜஸ்தானி லால் மாஸ் செய்யுங்கள். இது சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கீழே ராஜஸ்தானி லால் மாஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

MOST READ: ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

தேவையான பொருட்கள்:

* மட்டன் – 500 கிராம்

* காஷ்மீரி வரமிளகாய் – 10 (குறைந்தது 20 நிமிடம் நீரில் ஊற வைத்தது)

* தயிர் – 1/2 கப்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

* நெய் – தேவையான அளவு

* கருப்பு ஏலக்காய் – 2

* பச்சை ஏலக்காய் – 3

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 3

* பிரியாணி இலை – 1

* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு கனமான வாணலியில் சிறிது நீரை ஊற்றி, அதில் ஊற வைத்த காஷ்மீரி மிளகாய், சீரகம், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் உள்ள நீரை தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மசாலாவை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டனைக் கழுவிப் போட்டு, அதில் தயிர், சீரகப் பொடி, மல்லித் தூள், மஞ்சள் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

* பின்பு ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாக்களை வேக வைத்து எடுத்து வைத்துள்ள நீரையும் ஊற்ற வேண்டும்.

* பின்னர் தேவையான அளவு நீரை ஊற்றி, மூடி வைத்து 20-25 நிமிடம் மட்டனை வேக வைக்க வேண்டும்.

* மட்டன் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலாவை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, ஒரு கொதி வந்ததும், கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ராஜஸ்தானி லால் மாஸ் தயார்.

குறிப்பு:

* இந்த ரெசிபியை குக்கரைப் பயன்படுத்தியும் செய்யலாம். குக்கரைப் பயன்படுத்தினால், மட்டன் வேக 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

Image Courtesy: archanaskitchen

இந்த பதிவின் மூலமாக ராஜஸ்தானி மட்டன் லால் மாஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ராஜஸ்தானி மட்டன் லால் மாஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment