சைவம்

Ragi Paal Kolukattai Recipe In Tamil | சத்தான… ராகி பால் கொழுக்கட்டை

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சத்தான… ராகி பால் கொழுக்கட்டை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? நீங்கள் கம்பு, திணை, ராகி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பவரா? அப்படியானால் இன்று ராகி பால் கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த பால் கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானது. முக்கியமாக இதை செய்வது மிகவும் சுலபம்.

தேவையான பொருட்கள்:

* ராகி மாவு – 1/4 கப்

* அரிசி மாவு – 1 கப்

* சர்க்கரை – 1/2 கப்

* பால் – 1 கப்

* தண்ணீர் – 1 கப்

* குங்குமப்பூ – 1 சிட்டிகை

* பச்சை ஏலக்காய் – 3

* உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து கையால் கிளறி விட வேண்டும். பின் மெதுவாக சுடுநீரை ஊற்றி, கரண்டியால் மெதுவாக கிளறி, சூடு ஆறியதும் கையால் நன்கு மென்மையாக பிசைந்து, மூடி வைத்து ஒரு 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரித்தில் பால் மற்றும் நீரை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.

* பிறகு பிசைந்த மாவை ஒரு கையளவு எடுத்து, அதை முறுக்கு பிழியும் குழலில் வைத்து, கொதிக்கும் பாலில் பிழிந்து விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பாலில் பிழிந்து 3-5 நிமிடம் அப்படியே வேக வைத்து இறக்கினால், சுவையான ராகி பால் கொழுக்கட்டை தயார்.

குறிப்பு:

* இந்த பால் கொழுக்கட்டைக்கு தேங்காய் பால், கண்டென்ஸ்டு மில்க், பாதாம் பால் என்று எதைக் கொண்டு வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.

* வேண்டுமானால் நெய்யில் வறுத்த நட்ஸ்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

* வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.

Image Courtesy: southindianfoods

இந்த பதிவின் மூலமாக சத்தான… ராகி பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சத்தான… ராகி பால் கொழுக்கட்டை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment