Categories: அசைவம்

Prawn Kuzhambu Recipe In Tamil | Prawn Kuzhambu : இறால் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Prawn Kuzhambu : இறால் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த இறால் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த இறால் குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பானது இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* இறால் – 1 கப் (சுத்தம் செய்தது)

* சின்ன வெங்காயம் -10

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* சோம்பு – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

* சின்ன வெங்காயம் – 5

* கிராம்பு – 3

* பட்டை – 1/4 இன்ச்

* தேங்காய் – 1/8 கப்

* தக்காளி – 1 (சிறியது)

* மிளகு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் இறாலை சுத்தம் செய்து நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதங்கியதும், தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் சுத்தம் செய்த இறாலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இறால் நன்கு சுருங்கும் வரை வதக்க வேண்டும்.

* இறால் ஏற்கனவே நீர் விடும் என்பதால், 1/4-1/2 கப் நீரை ஊற்றி, இறாலை மென்மையாக வேக வைக்க வேண்டும்.

* பின்பு அதில் அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து, குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான இறால் குழம்பு தயார்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக Prawn Kuzhambu : இறால் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Prawn Kuzhambu : இறால் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago